/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
செவிலியரிடம் நான்கரை பவுன் தாலிக்கொடி பறிப்பு
/
செவிலியரிடம் நான்கரை பவுன் தாலிக்கொடி பறிப்பு
ADDED : பிப் 18, 2025 12:59 AM
செவிலியரிடம் நான்கரை பவுன் தாலிக்கொடி பறிப்பு
குளித்தலை:குளித்தலை அடுத்த, வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சனா, 29. இவர், பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிகிறார். நேற்று காலை, 11:00 மணியளவில் சொந்த வேலையாக, மொபட்டில் புரசம்பட்டி செல்லும் போது தேசிய மங்கலம் - கள்ளை நெடுஞ்சாலையில், பேரூர் மரகத பூங்கா அருகே சென்றபோது, அவருக்கு பின்னால் பல்சர் பைக்கில் வந்த ஒருவர் ஹெல்மெட் அணிந்தும், பின்னால் அமர்ந்திருந்தவர் ஹெல்மெட்
இல்லாமலும் இருந்தனர்.அவர்கள் இருவரும் சேர்ந்து, ரஞ்சனா கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுன் தாலி கொடியை பறித்து தப்பி சென்றனர். இதில் நிலை தடுமாறி ரஞ்சனா கீழே விழுந்தார். தோகைமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சேதமடைந்த வீட்டை சரி செய்ய கோரிமாற்றுத்திறனாளி மகனுடன் தந்தை மனுகரூர்:அரசு வழங்கிய வீடு சேதமடைந்து விட்டதால், அதனை சரி செய்து தரக்கோரி மாற்றுத்திறனாளி மகனை, தோளில் சுமந்து வந்த தந்தை கணேசன், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
கரூர் மாவட்டம், பஞ்சமாதேவியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு, மூன்று பெண் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளியான சக்தி பிரபு, 20, என்ற மகன் உள்ளனர். இவர்களுக்கு அரசு வழங்கிய வீட்டை சரி செய்து தர வேண்டும் என, மாற்றுத்திறனாளி மகனை தோளில் சுமந்து வந்து மனு கொடுத்தார்.
அதில், கூறியிருப்பதாவது: அரசு சார்பில், 30 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட வீட்டில் குடியிருந்து வந்தேன். பல ஆண்டுகளானதால், வீடு முற்றிலும் சிதிலமடைந்து விட்டது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக, வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். மகன் மாற்றுத்திறனாளியின் மருத்துவ செலவிற்கு கஷ்டப்
படுகிறேன். வீட்டை சரி செய்ய போதிய பணம் இல்லை. சேதமடைந்த வீட்டை சரி செய்து தர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

