/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாலிபரை பீர் பாட்டிலால்தாக்கிய இருவர் கைது
/
வாலிபரை பீர் பாட்டிலால்தாக்கிய இருவர் கைது
ADDED : பிப் 19, 2025 01:48 AM
வாலிபரை பீர் பாட்டிலால்தாக்கிய இருவர் கைது
கரூர்:கரூரில் வாலிபரை, பீர் பாட்டிலால் தாக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர், வடக்கு நரசிம்மபுரம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரது மகன் மகேஸ்வரன், 25; இவருக்கும், முத்துராஜபுரத்தை சேர்ந்த ஹரிஹரன், 20; என்பவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் உள்ளது. இந்நிலையில் கடந்த, 16 மதியம் மகேஸ்வரன், கரூரில் உள்ள திருவள்ளுவர் மைதானத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு குடி போதையில் சென்ற ஹரிஹரன், அவரது நண்பர் கவுதம், 23, ஆகியோர், மகேஸ்வரனை தகாத வார்த்தைகளால் பேசி, பீர் பாட்டிலால் அடித்து விட்டு ஓடினர். அதில், காயமடைந்த மகேஸ்வரன் கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் விசாரித்து, ஹரிஹரன், கவுதம் ஆகியோரை கைது செய்தனர்.