ADDED : பிப் 20, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோசமான சாலையால்வாகன ஓட்டிகள் அவதி
கிருஷ்ணராயபுரம்:சடையம்பட்டி சாலை மோசமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்சாயத்து சடையம்பட்டி கிராமத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை, கோடங்கிப்பட்டி பிரிவு சாலை முதல் அய்யர்மலை பிரிவு வரை உள்ளது. தினமும் ஏராளமானோர் செல்கின்றனர்.
தற்போது சாலையின், பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக காணப்படுகிறது. மேலும் சாலையோர இடங்களில், மண் அரிப்பு ஏற்பட்டு பெரிய அளவிலான குழிகள் இருப்பதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுகின்றனர். எனவே, சாலையை புதுப்பிக்கும் வகையில் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

