/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுமியை திருமணம் செய்தவாலிபர் மீது போக்சோ
/
சிறுமியை திருமணம் செய்தவாலிபர் மீது போக்சோ
ADDED : பிப் 22, 2025 01:50 AM
சிறுமியை திருமணம் செய்தவாலிபர் மீது போக்சோ
கரூர்:கரூர் அருகே, சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவரது தாய் மீது மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் வெண்ணிலையை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் பிரேம்குமார், 22; இவர், சின்னதாராபுரம் அருகே புரவிபாளையம் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியை கடந்தாண்டு ஜூலை, 16ல் திருமணம் செய்து கொண்டு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி தற்போது, நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து, தான்தோன்றிமலை பஞ்., யூனியன் சமூக நல அலுவலர் விஜயா, 54; போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து, பிரேம்குமார், அவரது தாய் தங்கமணி, 40; ஆகியோர் மீது, கரூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.