/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின் தடை ஏற்படும்போதுவாகன ஓட்டிகள் அவஸ்தை
/
மின் தடை ஏற்படும்போதுவாகன ஓட்டிகள் அவஸ்தை
ADDED : பிப் 23, 2025 01:38 AM
மின் தடை ஏற்படும்போதுவாகன ஓட்டிகள் அவஸ்தை
கரூர்:கரூர் மனோகரா கார்னர் பகுதியில், மின் தடை ஏற்படும் போது, தானியங்கி சிக்னல்கள் செயல்படுவது இல்லை. இதனால் போக்குவரத்து நெரிசலில், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, கோவை சாலை, திருச்சி சாலை, ஜவஹர் பஜார் சாலை மற்றும் தின்னப்பா கார்னர் சாலை பிரியும் இடத்தில், மனோகரா கார்னரில் நான்கு பகுதி
களிலும், தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின் தடை ஏற்படும் போது, தானியங்கி சிக்னல் செயல்படாது. அப்போது, வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது.எனவே, மனோகரா கார்னர் பகுதியில் உள்ள தானியங்கி சிக்னல்களை, 24 மணி நேரமும், செயல்படும் வகையில் யு.பி.எஸ்., வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

