/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
கரூரில் அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 26, 2025 01:29 AM
கரூரில் அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கரூர்:தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமையில், தாலுகா அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தி.மு.க., அரசு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், கட்டணம் இல்லாத சிகிச்சை இல்லாததால், காப்பீடு திட்டத்தை கைவிட வேண்டும், சி.பி.எஸ்., திட்ட உதவியாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் குரூப்-சி நியமனத்துக்கு விதிக்கப்பட்ட மறைமுக தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் தமிழ் செல்வி, செயலாளர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் சிங்கராயர், பொருளாளர் தனபால் உள்பட பலர் பங்கேற்றனர்.