/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிள்ளபாளையம் பஞ்சாயத்தில்புதிய நாடக மேடை திறப்பு
/
பிள்ளபாளையம் பஞ்சாயத்தில்புதிய நாடக மேடை திறப்பு
ADDED : பிப் 27, 2025 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிள்ளபாளையம் பஞ்சாயத்தில்புதிய நாடக மேடை திறப்பு
கிருஷ்ணராயபுரம்:பிள்ளபாளையம் பஞ்சாயத்தில், புதிய நாடக மேடை திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, பிள்ளபாளையம் பஞ்சாயத்து கிராமத்தில், புதிய நாடக மேடை, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 8.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. நாடக மேடையை மக்கள் பயன்பாட்டிற்கு குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் திறந்து வைத்தார். கிழக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் கதிரவன், கள்ளப்பள்ளி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சக்திவேல், தி.மு.க., பேச்சாளர் அண்ணாவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.