/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஊராட்சி செயலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
ஊராட்சி செயலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 13, 2025 02:06 AM
ஊராட்சி செயலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கரூர்:தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் பாலுசாமி தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், காலமுறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலாளர்களை, ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும், ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும், பதிவறை எழுத்தர்களுக்கு உண்டான, அரசின் சலுகைகளை ஊராட்சி செயலாளர்களுக்கும் விரிவுப்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில செயற்குழு உறுப்பினர்கள் நேசமணி, ரமேஷ், இணை செயலாளர் வெங்கடேஷ்வரன், மகளிர் அணி செயலாளர் வளர்மதி, மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, பொருளாளர் சண்முகம் உள்பட பலர்
பங்கேற்றனர்.