/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிவசக்தி செல்வ விநாயகர்கோவிலில் மண்டல பூஜை
/
சிவசக்தி செல்வ விநாயகர்கோவிலில் மண்டல பூஜை
ADDED : மார் 13, 2025 02:23 AM
சிவசக்தி செல்வ விநாயகர்கோவிலில் மண்டல பூஜை
குளித்தலை: குளித்தலை அடுத்த, வடசேரி பஞ்., கார்ணாம்பட்டி ராஜீவ் நகரில் சிவசக்தி செல்வ விநாயகர் கோவில் உள்ளது. கடந்த ஜன., 12ல் கும்பாபிஷேகம் செய்தனர். அன்று முதல், 47 நாட்கள் பக்தர்கள் விரதம் இருந்து, தினமும் மண்டல பூஜை செய்து வந்தனர். நிறைவு நாளான, 48வது நாள் மண்டல பூஜை பொதுமக்கள் சார்பாக நடந்தது. முன்னதாக காவிரி நதியில் இருந்து புண்ணிய தீர்த்தம் எடுத்து வந்தனர். பின், சிறு யாக குண்டம் அமைத்து, அதில் தீர்த்தங்களை வைத்து பூஜை செய்தனர்.
சிவசக்தி செல்வ விநாயகருக்கு பால், இளநீர், சந்தனம், குங்குமம், துளசி, நெய், பன்னீர், பழங்கள், தேன், திருமஞ்சனம், திருநீர், பஞ்சாமிர்தம் போன்ற, 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபி ேஷகம் செய்தனர்.
தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரதாசம் வழங்கப்பட்டது.