/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சமூக நலத்துறை சார்பில்பிரசார வாகன தொடக்கம்
/
சமூக நலத்துறை சார்பில்பிரசார வாகன தொடக்கம்
ADDED : மார் 14, 2025 02:05 AM
சமூக நலத்துறை சார்பில்பிரசார வாகன தொடக்கம்
கரூர்:கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், சமூக நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசார வாகன தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்த பின் கூறியதாவது: குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்காக மத்திய, மாநில அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
குழந்தை திருமண தடுப்பு சட்டம், குழந்தைகளுக்கான உதவி எண் 1098, பெண் குழந்தைகளை காப்போம், மகளிர் உதவி எண், 181, பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் போன்ற சமூக நலன் மற்றும் மகளிர்
உரிமைத்துறை நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் பொருத்தப்பட்ட வாகனம் செல்லவுள்ளது. அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் சென்று, 38 நாட்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயணம் மேற்கொள்ளும்.
இவ்வாறு கூறினார்.மாவட்ட சமுக நல அலுவலர் சுவாதி உள்பட பலர் பங்கேற்றனர்.