/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழூர் நகராட்சியில் இணைஆணையாளர் ஆய்வு பணி
/
புகழூர் நகராட்சியில் இணைஆணையாளர் ஆய்வு பணி
ADDED : மார் 15, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புகழூர் நகராட்சியில் இணைஆணையாளர் ஆய்வு பணி
கரூர்:புகழூர் நகராட்சியில், துாய்மை பாரத இயக்குனரும், நகராட்சி நிர்வாக இணை ஆணையாளருமான லலித் ஆதித்யா நீலம் நேற்று ஆய்வு செய்தார்.
அதில், புகழூர் நகராட்சிக்குட்பட்ட கந்தசாமி பாளையத்தில் நுண் உரம்
தயாரிப்பு பணி, 25.50 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும், பொருள் சேகரிப்பு கட்டுமான மையம், புகழூர்
நகராட்சி கார் ஸ்டாண்ட் அருகே, 36.28 லட்ச ரூபாய் மதிப்பில் பொது கழிப்பிடம் கட்டும் பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது, நகராட்சி ஆணையாளர் ேஹமலதா, பொறியாளர் மலர்க்கொடி, சுகாதார ஆய்வாளர் வள்ளிராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.