/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிளக்ஸ் பேனர் வைத்தஅ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்குப்பதிவு
/
பிளக்ஸ் பேனர் வைத்தஅ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்குப்பதிவு
பிளக்ஸ் பேனர் வைத்தஅ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்குப்பதிவு
பிளக்ஸ் பேனர் வைத்தஅ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்குப்பதிவு
ADDED : மார் 19, 2025 01:21 AM
பிளக்ஸ் பேனர் வைத்தஅ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்குப்பதிவு
கரூர்:கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, கடந்த, 16ல் வாங்கல் சாலை, அரசு காலனியில் குதிரை ரேக்ளா போட்டிகள் நடந்தது.
அதில், பங்கேற்ற மாநில அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் சின்னசாமி, மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் சிவபதி ஆகியோரை வரவேற்று, வாங்கல் சாலை அரசு காலனி பகுதியில், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார், பிளக்ஸ் பேனர்களை வைத்திருந்தார். பிளக்ஸ் பேனர்கள் வைக்க உரிய அனுமதி பெறவில்லை என, போலீஸ் எஸ்.ஐ., ஆர்த்தி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, வெங்கமேடு போலீசார், கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.