தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அமராவதி ஆற்றில் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

அமராவதி ஆற்றில் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

அமராவதி ஆற்றில் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை


ADDED : மார் 21, 2025 01:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2025 01:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அமராவதி ஆற்றில் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

கரூர்:கரூர், அமராவதி ஆற்றில் புதர்மண்டி கிடக்கும் கருவேல மரங்களை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாவட்ட மக்களின் விவசாய தேவைகளையும், குடிநீர் தேவையையும் அமராவதி ஆறு பூர்த்தி செய்கிறது. பழனி மலைத்தொடருக்கும், ஆனைமலை தொடருக்கும் இடையே உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகி, சிறு ஓடையாக வந்து இதனுடன் பாம்பாறு, சின்னாறு, தேவாறு, குடகனாறு, உப்பாறு, சண்முகா நதி உள்ளிட்ட பல கிளை ஆறுகள் இணைந்து பெரிய ஆறாக உருவெடுத்து வளம் சேர்க்கிறது அமராவதி ஆறு.

திருப்பூர் மாவட்ட மக்களின் தேவைகளையும், கரூர் மாவட்ட மக்களின் தேவைகளையும் ஒருசேர பூர்த்தி செய்யும் அமராவதி ஆறானது கரூர் மாவட்டம், திருமுக்கூடலுார் என்ற இடத்தில் காவிரியில் கலந்து விடுகிறது.

கரூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் அமராவதி ஆகிய இரு ஆறுகள் பாய்கிறது. தற்போது அமராவதி ஆறு வறண்டுள்ளது.

மேலும் ஆற்றில் கருவேலமரங்கள் அதிகளவில் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. பல இடங்களில் தண்ணீர் செல்ல தடை ஏற்படுத்தும் வகையில் வளர்ந்துள்ளது. சீமை கருவேல மரங்களின் வேர்கள் அதிகளவில் பூமிக்கடியில் ஊடுருவி, நிலத்தடி நீரை உறிஞ்சி வளரும். காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி எடுத்து கொள்ளும் தன்மை உடையதாக உள்ளது. ஆற்றில் தண்ணீர் திறக்கும் போது அதிகப்படியான தண்ணீரை உறிஞ்சி எடுத்து கொள்கிறது. கடைமடை வரை தண்ணீர் செல்வது தடைபடுகிறது.

எனவே, உடனடியாக பொக்லைன் உதவியுடன் ஆற்றில் புதர்மண்டி கிடக்கும் கருவேல மரங்களை அப்புறப்படுத்தி, கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us