/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்பக்தர்கள் வசதிக்காக தரை விரிப்பு
/
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்பக்தர்கள் வசதிக்காக தரை விரிப்பு
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்பக்தர்கள் வசதிக்காக தரை விரிப்பு
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்பக்தர்கள் வசதிக்காக தரை விரிப்பு
ADDED : மார் 23, 2025 01:19 AM
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்பக்தர்கள் வசதிக்காக தரை விரிப்பு
கரூர்,:கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், கோடை காலத்தையொட்டி, பக்தர்கள் வசதிக்காக, தரைவிரிப்புகள் போடப்பட்டுள்ளன.
கரூர் நகரின் மையப்பகுதியில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா, சனி பெயர்ச்சி நிகழ்ச்சி விரைவில் நடக்க உள்ளது. மேலும், கிருத்திகை, பிரதோஷம், அஷ்டமி, நவமி நாட்களில் ஏராளமான, பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் கடந்த, 10 நாட்களாக சராசரியாக, 100 டிகிரி வெயிலின் தாக்கம் உள்ளது. இதனால், கோவில் வளாகத்தில் பக்தர்கள், குழந்தைகள் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதையடுத்து, கோடை காலத்தையொட்டி, கோவில் வளாகத்தில் பக்தர்கள் வரிசையாக நின்று செல்ல வசதியாக, தரை விரிப்புகள் நேற்று போடப்பட்டன.