/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாடி, கூரை வீடுகளில் வசிப்பவர்கள்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
/
மாடி, கூரை வீடுகளில் வசிப்பவர்கள்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
மாடி, கூரை வீடுகளில் வசிப்பவர்கள்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
மாடி, கூரை வீடுகளில் வசிப்பவர்கள்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
ADDED : மார் 25, 2025 01:04 AM
மாடி, கூரை வீடுகளில் வசிப்பவர்கள்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
கரூர்:கரூர் மாவட்டத்தில், கோடைவெயில் தொடக்கத்திலேயே அதிகமாக இருந்து வருகிறது. வெப்ப அலை பாதிப்புகளை தற்காத்து கொள்ள வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும் போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது கண்ணாடி மற்றும் காலணி அணிந்து குடையுடன் பாதுகாப்பாக செல்ல வேண்டும்.
கூடுமானவரை காலை, 11:00 முதல், பிற்பகல் 3:00 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்திவிட்டு வெளியே செல்ல கூடாது. குழந்தைகளுக்கான வெப்பம் தொடர்பான நோய்களை, எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் சிறுநீரை சோதித்து பார்க்கவும், மஞ்சள் நிறமுள்ள சிறுநீர் நீரிழப்பை குறிக்கலாம்.
தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை, தினமும் இருமுறை சரிபார்த்து கொள்ள வேண்டும். போதிய இடைவேளைகளில், நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் ஒயர்கள் உருகி, சார்ட் சர்க்யூட் ஏற்பட்டு அதில் ஏற்படும் தீப்பொறியால், கூரை வீடுகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. கோடை முடியும் வரை எச்சரிக்கையாக இருப்பதுடன், கூரை வீடுகளில் வசிப்பவர்கள் தண்ணீரை வைத்து கொள்ளலாம்.
இத்தகவலை கலெக்டர் தங்க
வேல் தெரிவித்துள்ளார்.