/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
துாய்மை பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க இ.கம்யூ., கோரிக்கை
/
துாய்மை பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க இ.கம்யூ., கோரிக்கை
துாய்மை பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க இ.கம்யூ., கோரிக்கை
துாய்மை பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க இ.கம்யூ., கோரிக்கை
ADDED : ஏப் 01, 2025 02:09 AM
துாய்மை பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க இ.கம்யூ., கோரிக்கை
கரூர்:புகழூர் நகராட்சி பகுதியில், தேங்கும் குப்பையை அப்புறப்படுத்த துாய்மை பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, இ.கம்யூ., வலியுறுத்தியுள்ளது.
புகழூர், இ.கம்யூ., ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் தனபால் தலைமை வகித்தார். நொய்யல் குறுக்கு சாலையில், நிழற்கூடம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடுமுடி-, கரூர் சாலையில் கொரோனா பரவல் காலத்துக்கு முன், சென்று கொண்டிருந்த டவுன் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புகழூர் நகராட்சியில், துாய்மை பணியாளர்களை அதிகளவு பணி அமர்த்தாமல் உள்ளதால், வீதிகளில் குப்பை அள்ளப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. புகழூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக துாய்மை பணியாளர்களை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய பொறுப்பாளர்கள் செல்லமுத்து, சுப்ரமணி, லோகநாதன், சம்பூர்ணம், மாவட்ட துணை செயலாளர் சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.