/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஈரோடு, திருப்பூர் தொழிற்பேட்டை ஆதிதிராவிடர் விண்ணப்பிக்க அழைப்பு
/
ஈரோடு, திருப்பூர் தொழிற்பேட்டை ஆதிதிராவிடர் விண்ணப்பிக்க அழைப்பு
ஈரோடு, திருப்பூர் தொழிற்பேட்டை ஆதிதிராவிடர் விண்ணப்பிக்க அழைப்பு
ஈரோடு, திருப்பூர் தொழிற்பேட்டை ஆதிதிராவிடர் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஏப் 02, 2025 01:24 AM
ஈரோடு, திருப்பூர் தொழிற்பேட்டை ஆதிதிராவிடர் விண்ணப்பிக்க அழைப்பு
கரூர்:ஈரோடு, திருப்பூர் தொழிற்பேட்டையில், ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசு சார்பில், ஈரோடு மாவட்டம் ஈங்கூர், திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் தொழிற்பேட்டைகளில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தொழிற்கூடங்களை குத்தகை மற்றும் வாடகை முறையில் வழங்க திட்டமிட்டுள்ளது. தற்போது முதலிபாளையம் தொழிற்பேட்டையில், அடிப்படை புனரமைப்பு பணிகள் நடக்கிறது. ஈங்கூர் தொழிற்பேட்டையிலும் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு, மூன்று மாதங்களில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தில், வாடகை மற்றும் குத்தகை முறையில் காலிமனையாகவோ, மறுசீரமைக்கப்பட்ட தொழிற்கூடங்களாகவோ நீண்டகால குத்தகை அல்லது வாடகை முறையில் வழங்கப்படும். அனைத்து பகுதி
களிலிருந்தும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர், தாங்கள் தொழில் செய்வதற்கு தொழிற்கூடங்களை பெற விண்ணப்பிக்கும் முன்பாக, தளத்தை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும், 4 காலை, 10:00 மணியளவில் ஈங்கூர் தொழிற்பேட்டையை பார்வையிடலாம். இதில் பங்கு பெற விருப்பமுள்ள தொழில் முனைவோர், https://forms.gle/fZPDgyWUToAAUobt7 என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு, 9150277723 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்
தகவலை, கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.