/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வடிகால் வசதி இல்லாத சின்டெக்ஸ்தொட்டியால் நோய் அபாயம்
/
வடிகால் வசதி இல்லாத சின்டெக்ஸ்தொட்டியால் நோய் அபாயம்
வடிகால் வசதி இல்லாத சின்டெக்ஸ்தொட்டியால் நோய் அபாயம்
வடிகால் வசதி இல்லாத சின்டெக்ஸ்தொட்டியால் நோய் அபாயம்
ADDED : ஏப் 02, 2025 01:40 AM
வடிகால் வசதி இல்லாத சின்டெக்ஸ்தொட்டியால் நோய் அபாயம்
கரூர்,:கரூர் அருகே, வடிகால் வசதி இல்லாததால், சின்டெக்ஸ் தொட்டியை சுற்றி கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால், அந்த பகுதியில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.
கரூர் அருகே ஆத்துார் பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதனால், பல ஆண்டுகளுக்கு முன், அந்த பகுதியில் புதிதாக போர்வெல் அமைக்கப்பட்டு, மின் மோட்டார் வசதியுடன், சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டது. அதில், இப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தொட்டியை சுற்றி, வடிகால் வசதி இல்லை. இதனால், கழிவுநீர் சின்டெக்ஸ் தொட்டி பகுதியில் தேங்கியுள்ளது. அதில், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று அபாயம் உள்ளது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், கிராம பஞ்., நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, சின்டெக்ஸ் தொட்டி கழிவுநீர் செல்லும் வகையில், வடிகால் வசதியை செய்து தர வேண்டும்.