/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மழை நீர் சேமிப்பு குளத்தில்முட்செடிகளால் கடும் பாதிப்பு
/
மழை நீர் சேமிப்பு குளத்தில்முட்செடிகளால் கடும் பாதிப்பு
மழை நீர் சேமிப்பு குளத்தில்முட்செடிகளால் கடும் பாதிப்பு
மழை நீர் சேமிப்பு குளத்தில்முட்செடிகளால் கடும் பாதிப்பு
ADDED : ஏப் 08, 2025 01:46 AM
மழை நீர் சேமிப்பு குளத்தில்முட்செடிகளால் கடும் பாதிப்பு
கிருஷ்ணராயபுரம்:வேங்காம்பட்டி கிராமத்தில், மழை நீர் சேமிப்பு குளத்தில் முள் செடிகள் வளர்ச்சி காரணமாக மழை நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, வேங்காம்பட்டி கிராமத்தில் மழை நீர் சேமிப்பு குளம் உள்ளது. இந்த குளத்திற்கு வேங்காம்பட்டி பகுதியில், மழை நீர் அதிகமாக வரும்போது, சேமிக்கப்படுகிறது. அந்த குளம் நிலத்தடி நீர் மட்டம் சீராக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது மழை நீர் சேமிப்பு குளம் முழுவதும், அதிகமான முள் செடிகள் வளர்ச்சி அடைந்து, மழை நீர் வழித்தடம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குளத்தில் மழை நீர் சேமிக்கும் வகையில், குளத்தை சுற்றி வளர்ந்து வரும் முள் செடிகளை அகற்ற, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.