/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்கவிவசாயிகள் விண்ணப்பிக்கலா
/
நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்கவிவசாயிகள் விண்ணப்பிக்கலா
நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்கவிவசாயிகள் விண்ணப்பிக்கலா
நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்கவிவசாயிகள் விண்ணப்பிக்கலா
ADDED : ஏப் 10, 2025 01:18 AM
நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்கவிவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
கரூர்:ஊரகவளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில், விவசாய பயன்பாட்டுக்கு வண்டல் மண், களிமண் எடுக்க விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில், ஊரகவளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம், கண்மாய் நீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், களிமண் ஆகியவற்றை விவசாய பயன்பாட்டிற்காக இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதில், விவசாய பயன்பாட்டுக்கு நஞ்சை நிலத்தில், 2 ஆண்டுக்கு ஒரு முறை ஏக்கருக்கு, 75 கன மீட்டரும், 25 யூனிட், புஞ்சை நிலத்தில், 2 ஆண்டுக்கு ஒரு முறை ஏக்கருக்கு, 90 கன மீட்டர், 30 யூனிட், மண்பாண்ட தொழில் பயன்பாட்டு, 60 கன மீட்டர் அல்லது 20 யூனிட் எடுத்து கொள்ளலாம்.
இதில், வேளாண் நிலம் அமைந்துள்ள கிராமம் மற்றும் வண்டல் மண், களிமண் துார்வாரி எடுத்துச் செல்லப்பட வேண்டிய நீர் நிலை, பயனாளியின் வருவாய் வட்டத்தில் இருக்க வேண்டும். மேலும், புல எண், விஸ்தீரணம், நில வகைப்பாடு, வாகனத்தின பதிவு உள்பட தேவையான விபரங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மண்பாண்ட தயாரிப்புக்காக வருவாய் கிராமம் மற்றும் வட்டத்தில் களிமண் எடுத்து செல்வதையும் மண்பாண்ட தொழிலின் உண்மைத் தன்மை மற்றும் விண்ணப்பதாரரரின் வசிப்பிடம் குறித்து, கிராம நிர்வாக அலுவலரால் சரிபார்க்கப்பட்டு சான்றளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.