/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரி குடிநீர் குழாயில் விரிசல்வீணாகி செல்லும் தண்ணீர்
/
காவிரி குடிநீர் குழாயில் விரிசல்வீணாகி செல்லும் தண்ணீர்
காவிரி குடிநீர் குழாயில் விரிசல்வீணாகி செல்லும் தண்ணீர்
காவிரி குடிநீர் குழாயில் விரிசல்வீணாகி செல்லும் தண்ணீர்
ADDED : ஏப் 16, 2025 01:04 AM
காவிரி குடிநீர் குழாயில் விரிசல்வீணாகி செல்லும் தண்ணீர்
கிருஷ்ணராயபுரம்:கரட்டுப்பட்டி நெடுஞ்சாலை வழியாக, மைலம்பட்டி வரை செல்லும் காவிரி குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகாதானபுரம் காவிரி ஆற்றில் இருந்து, மைலம்பட்டி வரை காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மைலம்பட்டி, தரகம்பட்டி ஆகிய கிராம மக்கள் காவிரி நீரை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது மைலம்பட்டி வரை செல்லும், காவிரி கூட்டு குடிநீர் செல்லும் குழாயில், விரிசல் ஏற்பட்டு தினமும் தண்ணீர் வீணாகி செல்கிறது. தற்போது கோடை காலமாக இருப்பதால், மக்களுக்கு குடிநீர் பிரச்னை பல இடங்களில் நிலவி வருகிறது.
எனவே, விரிசல் ஏற்பட்டு குழாயை சரி செய்து, உடனடியாக அனைத்து பகுதிகளுக்கும், தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க, குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.