/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாநில அளவிலான சிலம்பம் குளித்தலை மாணவியர் தகுதி
/
மாநில அளவிலான சிலம்பம் குளித்தலை மாணவியர் தகுதி
ADDED : மே 20, 2025 02:21 AM
மாநில அளவிலான சிலம்பம்
குளித்தலை மாணவியர் தகுதி
குளித்தலை, மே 20
மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கரூரில், தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பாக சிலம்பம் போட்டி நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் பஞ்சபூதா மாணவ மாணவியர் பங்கேற்று, 18 தங்கப்பதக்கம், 9 வெள்ளி பதக்கம் வென்றனர். அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள, மாநில அளவிலான சிலம்ப போட்டிக்கு தேர்வாகியுள்ள பெண்கள், 10 பேர், ஆண்கள் இருவர் ஆகியோருக்கு, குளித்தலை பஞ்சபூதா சர்வதேச தற்காப்பு கலை கழகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.