/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திருப்பதி திருமலை ஏழுமலையான் பாதயாத்திரை குழுவினர் நடைபயணம்
/
திருப்பதி திருமலை ஏழுமலையான் பாதயாத்திரை குழுவினர் நடைபயணம்
திருப்பதி திருமலை ஏழுமலையான் பாதயாத்திரை குழுவினர் நடைபயணம்
திருப்பதி திருமலை ஏழுமலையான் பாதயாத்திரை குழுவினர் நடைபயணம்
ADDED : ஜூலை 16, 2025 02:06 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, தோகைமலையில் திருப்பதி திருமலை ஏழுமலையான் பாதயாத்திரை குழு சார்பாக, 31ம் ஆண்டு பாதயாத்திரை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.
தோகைமலை, திருப்பதி திருமலை ஏழுமலையான் பாதயாத்திரை குழு சார்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு, பாதயாத்திரையாக செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதேபோல் இந்தாண்டு மாலை அணிந்து பக்தர்கள் காவிரி நதியில் புனித நீராடினர். பின்னர் அனைத்து பக்தர்களும், 11 நாட்களாக விரதம் இருந்து வந்தனர்.
இதையடுத்து, நேற்று திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு, 31வது ஆண்டு பாதயாத்திரை புறப்பாடு நிகழ்ச்சி, தோகைமலை வரதராஜ பெருமாள் கோவிலில் துவங்கியது. முன்னதாக தோகைமலை சக்தி விநாயகர், பகவதியம்மன், வெள்ளப்பட்டி மாரியம்மன், கருப்பசாமி மற்றும் வரதராஜபெருமாள் கோவில்களில்
சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.