/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அறுவடை சுறுசுறு: வரமிளகாய் கிலோ ரூ.160
/
அறுவடை சுறுசுறு: வரமிளகாய் கிலோ ரூ.160
ADDED : மார் 08, 2025 01:35 AM
அறுவடை சுறுசுறு: வரமிளகாய் கிலோ ரூ.160
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட வீரியபாளையம், கீரனுார், பஞ்சப்பட்டி, சேங்கல், வயலுார், சரவணபுரம், பாப்பகாப்பட்டி, சிவாயம், வேப்பங்குடி, வரகூர், குழந்தைப்பட்டி, மேட்டுப்பட்டி, வேங்காம்பட்டி ஆகிய பகுதிகளில், மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் அதிகம் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு, கிணற்று பாசன முறையே பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, செடிகளில் மிளகாய் நல்ல விளைச்சல் கண்டுள்ளது.
விளைந்த மிளகாய்களை, விவசாய கூலித்தொழிலாளர்களை கொண்டு பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பறித்த மிளகாய்களை, வெயிலில் உலர்த்துகின்றனர்.
பின் அவற்றை தரம் பிரித்து கரூர், திருச்சி பகுதிகளில் செயல்படும்
மண்டிகளில் விற்பனை செய்கின்றனர். தற்போது, வரமிளகாய் ஒரு கிலோ, 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்
படுகிறது.