/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பஞ்சப்பட்டி ஏரியில் மரங்களைஅகற்ற ரூ.29 லட்சத்துக்கு ஏலம்
/
பஞ்சப்பட்டி ஏரியில் மரங்களைஅகற்ற ரூ.29 லட்சத்துக்கு ஏலம்
பஞ்சப்பட்டி ஏரியில் மரங்களைஅகற்ற ரூ.29 லட்சத்துக்கு ஏலம்
பஞ்சப்பட்டி ஏரியில் மரங்களைஅகற்ற ரூ.29 லட்சத்துக்கு ஏலம்
ADDED : பிப் 20, 2025 02:01 AM
பஞ்சப்பட்டி ஏரியில் மரங்களைஅகற்ற ரூ.29 லட்சத்துக்கு ஏலம்
குளித்தலை: குளித்தலை ஆர்.டி.ஓ..  அலுவலக கூட்டரங்கில், நீர்வளத்துறை அரியாறு வடிநிலம் பாசன பிரிவு உதவி பொறியாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள, பஞ்சப்பட்டி ஏரியில், 1,300 ஏக்கர் பரப்பளவில் உள்பகுதியில் உள்ள முற்செடிகள் அகற்றிக் கொள்வது சம்பந்தமாக பொது ஏலம் நடந்தது.
எஸ்.டி.ஓ., கார்த்திகேயன் தலைமையிலும், உதவி பொறியாளர் சுகுமார் முன்னிலையிலும் ஏலம் நடந்தது. ஏலதாரர்கள் முன் பணமாக, ஐந்து லட்சம் ரூபாய் டிமாண்ட் டிராப்ட் பெற்று ஏலத்தில் கலந்து கொண்டனர். அரசு மதிப்பாக, 24 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க.,  செயலாளர் கரிகாலன் என்பவர், 29 லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். ஏலத்தில் 55 பேர் கலந்து கொண்டனர்.