/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கட்டட பொருட்கள் திருட்டு வட மாநில வாலிபர் கைது
/
கட்டட பொருட்கள் திருட்டு வட மாநில வாலிபர் கைது
ADDED : ஆக 20, 2024 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: வாங்கல் அருகே, கட்டட பொருட்களை திருடியதாக, வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வெண்ணைமலை நாவல் நகரை சேர்ந்தவர் முருகேசன், 49. இவர் அதே பகுதியில், புதிதாக கட்டடம் கட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த, 15ல் புதிய கட்டட பகுதியில் வைக்கப்பட்டிருந்த, 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கட்டட பொருட்கள் திருட்டு போனது. இதுகுறித்து, முருகேசன் கொடுத்த புகார்படி, கட்டட பொருட்களை திருடியதாக, வெண்ணைமலையில் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த பாபு காஜி, 34, என்பவரை, வாங்கல் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

