/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேதமடைந்த பயணிகள் நிழற்கூடம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
/
சேதமடைந்த பயணிகள் நிழற்கூடம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
சேதமடைந்த பயணிகள் நிழற்கூடம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
சேதமடைந்த பயணிகள் நிழற்கூடம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 10, 2024 05:16 AM
கரூர்: கரூரில் சேதம் அடைந்துள்ள, நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர்-சேலம் பழைய சாலை சர்ச் கார்னர் பஸ் ஸ்டாப் பகுதியில், பயணி கள் வசதிக்காக முன்னாள் தி.மு.க., எம்.பி., கே.சி. பழனிசாமியின், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல ஆண்டுக-ளுக்கு முன், நிழற்கூடம் கட்டப்பட்டது. அதை வெங்கமேடு, வெண்ணைமலை, வாங்கப்பாளையம், காதப்பாறை, வேலாயுதம்-பாளையம், நாமக்கல் மாவட்டம், பரமத்தி
வேலுார் பகுதிக-ளுக்கு, டவுன் பஸ்களில் செல்லும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், சமீபத்தில் பயணிகள் நிழற்கூடம் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதனால், பயணிகள் அச்சத்துடன் பஸ்சுக்-காக காத்திருக்கின்றனர். கரூரில் பருவமழை தொடங்கிய நிலையில், சேதம் அடைந்த பயணிகள்
நிழற்கூடத்தை உடனடி-யாக சீரமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.