/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெள்ளாளப்பட்டியில் வாய்க்காலை துார்வாரணும்
/
வெள்ளாளப்பட்டியில் வாய்க்காலை துார்வாரணும்
ADDED : மார் 25, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தான்தோன்றிமலை:கரூர் அருகே, வெள்ளாளப்பட்டியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள்
உள்ளன. அப்பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது.
ஆனால்,வாய்க்காலில் பல இடங்களில் மண் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அதிகளவில் செடிகள் முளைத்துள்ளன. வாய்க்காலில் அடைப்புகாரணமாக கழிவுநீர், மழை நீர் செல்லாமல் தேங்கியுள்ளது. அதில்,கொசு உற்பத்தி ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே,
வெள்ளாளப்பட்டி பகுதியில் உள்ள, கழிவுநீர் வாய்க்காலை துார்வார, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

