ADDED : ஜன 11, 2025 01:33 AM
நகர ஐக்கிய ஜமாஅத்ஆலோசனை கூட்டம்
அரவக்குறிச்சி,:பள்ளப்பட்டி நகராட்சியுடன், லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சியை இணைப்பது சம்பந்தமாக, பள்ளப்பட்டி ஜமாஅத்துல் உலமா மற்றும் பள்ளப்பட்டி நகர ஐக்கிய ஜமாஅத்தின் ஆலோசனைக் கூட்டம் பள்ளப்பட்டி தனியார் மஹாலில், அல்ஹாஜ் அப்துர் ரஹ்மான் சிராஜி ஹஜ்ரத் தலைமையில் நடைபெற்றது.
பள்ளப்பட்டி, லிங்கமநாயக்கன்பட்டி ஆகிய ஊர்களின் நலன்களை கருத்தில் கொண்டு, பள்ளப்பட்டி நகராட்சியுடன் லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சியை இணைக்க வேண்டாம் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அது சம்பந்தமாக அரசு அலுவலகங்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் கடிதம் அனுப்ப வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் ஊர் முழுவதும் கையெழுத்து வாங்குவது எனவும், பொதுமக்கள் தங்கள் பெயரை குறிப்பிட்டு கையெழுத்திட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.