/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நகராட்சிக்கு வரி செலுத்தகமிஷனர் வேண்டுகோள்
/
நகராட்சிக்கு வரி செலுத்தகமிஷனர் வேண்டுகோள்
ADDED : ஜன 12, 2025 01:13 AM
அரவக்குறிச்சி, :நடப்பு 2024--25ம், ஆண்டுக்கான நிலுவை மற்றும் நடப்பு சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், நகராட்சிக்குட்பட்ட கடைகளின் வாடகை மற்றும் தொழில் உரிமம் ஆகியவற்றை செலுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளப்பட்டி நகராட்சி கமிஷனர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், 2024--25ம், ஆண்டுக்கான நிலுவை மற்றும் நடப்பு சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், நகராட்சிக்குட்பட்ட கடைகளின் வாடகை மற்றும் தொழில் உரிமம் ஆகியவற்றை, நகராட்சி கருவூலத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும் பொதுமக்கள் சொத்து வரியை, முதலாம் அரையாண்டான ஏப்., 30க்குள்ளும், இரண்டாம் அரையாண்டான செப்., 30க்குள்ளும் செலுத்த வேண்டும். மேற்கண்ட வரி இனங்களை, காலதாமதம் இன்றி செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.