ADDED : ஜன 18, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், : 'கரூர் மாவட்ட, தி.மு.க., சார்பில் நாளை (19 ல்) குதிரை வண்டி பந்தயம் நடக்கிறது' என, மாவட்ட தி.மு.க., செயலாளரும், மின் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக துணை முதல்வர் உதயநிதியின் பிறந்த நாளையொட்டி, நாளை மாலை, 3:00 மணிக்கு கரூர் வாங்கல் சாலையில், குதிரை வண்டி பந்தயம் நடக்கிறது.
பெரிய குதிரை, சிறிய குதிரை, புது குதிரை என, மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடக்க உள்ளன. வெற்றி பெறும் குதிரை வண்டி
உரிமையாளர்களுக்கு, ரொக்க பரிசு வழங்கப்படும். இதை காண கட்சியினர், பொதுமக்கள் வரலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.