/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
/
அரவக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : ஜன 23, 2025 01:22 AM
அரவக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
அரவக்குறிச்சி,:அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை திருப்பூர் சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் முருகபூபதி தலைமை வகித்தார். உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி, கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி ஆகியோர் முன்னிலை வைத்தனர். நிகழ்வில் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாணவ மாணவியர் சாலை விதிகளை மதிப்போம், விபத்தில்லா தமிழ்நாட்டை படைப்போம், மொபைல்போன் பேசியபடி வாகனம் ஓட்டாதீர், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டாதீர், பஸ் படியில் நின்று பயணம் செய்ய வேண்டாம், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்ட வேண்டாம், குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டாதீர் உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டனர்.
சாலை பாதுகாப்பு உதவி பொறியாளர் சிவசுப்பிரமணியம், அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் வினோத் குமார் மற்றும் பேராசிரியர்கள், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.