ADDED : ஜன 24, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொசு ஒழிப்பு பணி மும்முரம்
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வார்டுகளான கோவக்குளம், பிச்சம்பட்டி, கிருஷ்ணராயபுரம், கடைவீதி ஆகிய பகுதிகளில் டவுன் பஞ்சாயத்து சார்பில், கொசு ஒழிப்பு பணி நடந்தது. மக்கள் வசிக்கும் இடங்களில் கழிவு நீர் தேங்காமல் இருக்கும் வகையில் அகற்றுதல், பழைய டயர்கள், பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் அகற்றுதல், நல்ல குடிநீர் மூடி வைத்தல் மற்றும் அபெட் மருந்து தெளித்தல் ஆகிய பணிகள் செய்யப்பட்டன. சுகாதார பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

