வெற்றிலை விலை உயர்வு
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட திருக்காம்புலியூர், பிச்சம்பட்டி, கோவக்குளம், மேட்டு மகாதானபுரம், மகாதானபுரம், நந்தன்கோட்டை, மகிளிப்பட்டி, பிள்ளபாளையம், சிந்தலவாடி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை சாகுபடி முக்கிய தொழிலாக உள்ளது.
கடந்த மாதம், வெற்றிலை விற்பனை மந்தநிலையில் இருந்தது. அப்போது, 100 வெற்றிலை கொண்ட ஒரு கவுளி, 40 ரூபாய்க்கும்; 100 கவுளி கொண்ட ஒரு சுமை, 4,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது வெற்றிலை வரத்து சரிந்துள்ளதால், தேவை அதிகரித்துள்ளது. இதனால் வெற்றிலை விலை உயர்ந்துள்ளது. 100 கவுளி கொண்ட ஒரு சுமை, 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சுமைக்கு, 1,000 ரூபாய் விலை உயர்ந்துள்ளதால் வெற்றிலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது ஆங்காங்கே கோவில் திருவிழாக்களால், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய இடங்களுக்கு கொண்டு சென்று, சில்லரை விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.