/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
/
அரவக்குறிச்சியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
ADDED : பிப் 01, 2025 12:52 AM
அரவக்குறிச்சியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி பகுதி பொதுமக்களுக்கு, இந்திய தேசிய சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், வளையப்பட்டியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இதில், பெண் உரிமை, தகவல் அறியும் உரிமை, முதல் தகவல் அறிக்கை, ஜீரோ எப்.ஐ.ஆர்., உள்ளிட்ட பல்வேறு சட்ட அம்சங்கள் குறித்து கிராம மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், அரவக்
குறிச்சி அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமில், பெண்களுக்கான பாலியல் வன்கொடுமையில் இருந்து விடுபடுதல்; மகளிருக்கான பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது; பிரச்னை ஏற்பட்டால் சட்ட உதவியை நாடவேண்டிய அவசியம்; மாணவியருக்கு பாலியல் சம்பந்தமாக பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக பெற்றோரிடம் அல்லது பள்ளி ஆசிரியரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
மேலும், மாணவர்களுக்கு கட்டாய கல்வி, சாலை விதிகளை பின்பற்ற வேண்டிய அவசியம், 18 வயது நிரம்பிய பின், ஓட்டுனர் உரிமம் பெற்று மோட்டார் வாகனங்களை இயக்க வேண்டும் என, அறிவுறுத்தினர். அரவக்
குறிச்சி நீதிமன்ற வக்கீல் முகமது அலி, இலவச சட்ட மைய பணியாளர் ராஜேஸ்வரி ஆகியோர், சட்டம் குறித்தும், இலவச சட்ட மையம் குறித்தும் எடுத்துரைத்தனர். தலைமை ஆசிரியர் செந்தில்குமார், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.