/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : பிப் 05, 2025 01:12 AM
பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
குளித்தலை :குளித்தலை அருகே, தொண்டமாங்கிணத்தில் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா நடந்தது.
குளித்தலை அடுத்த, தொண்டமாங்கிணத்தில் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர், பத்ரகாளியம்மன், கருப்பசாமி, முனியப்பசாமி ஆகிய பரிவார சுவாமிகளுக்கு தனித்தனியாக சன்னதிகள் அமைந்துள்ளன. குளித்தலை காவிரி நதியில் இருந்து, பக்தர்கள் தீர்த்தக்குடங்களை எடுத்து வந்து, பத்ரகாளியம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.பின்னர், முதல் கால பூஜையில் அனுக்ஞை, கணபதி ஹோமம், விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை தன பூஜை, கும்ப அலங்காரம், மருந்து சாத்துதல் உள்பட பல்வேறு யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து காப்பு கட்டுதல், மங்கள இசை நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை சக்தி விநாயகர், பத்ரகாளியம்மன், கருப்பசாமி, முனியப்பசாமி ஆகிய பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கு புண்ணிய தீர்த்தம் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.பின்னர், தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.