/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடிநீர் குழாய் விரிசல்சரி செய்யப்படுமா?
/
குடிநீர் குழாய் விரிசல்சரி செய்யப்படுமா?
ADDED : பிப் 05, 2025 01:15 AM
குடிநீர் குழாய் விரிசல்சரி செய்யப்படுமா?
கிருஷ்ணராயபுரம் : பாலப்பட்டியில், குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு காவிரி நீர் வீணாகிறது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, கிராம பஞ்சாயத்துகளுக்கு காவிரி குடிநீர் திட்டம் மூலம், சிந்தலவாடி காவிரி ஆற்றில் இருந்து, குழாய்கள் வழியாக கொண்டு செல்லப்பட்டு வினியோகம் நடக்கிறது. தற்போது பாலப்பட்டி, மேட்டுப்பட்டி சாலை அருகில் காவிரி குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு, அதிகமான தண்ணீர் தினமும் வீணாகி செல்கிறது. இதனால் கிராமங்களுக்கு காவிரி குடிநீரின் குறைவான வினியோகம் நடக்கிறது. மேலும் வீணாகும் தண்ணீரால் சாலை பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, விரிசல் ஏற்பட்டுள்ள குழாயை சரி செய்ய, குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.