/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அனைத்து தொழிற்சங்கங்கள்சார்பில் பிரசார இயக்கம்
/
அனைத்து தொழிற்சங்கங்கள்சார்பில் பிரசார இயக்கம்
ADDED : பிப் 15, 2025 02:00 AM
அனைத்து தொழிற்சங்கங்கள்சார்பில் பிரசார இயக்கம்
கரூர்:கரூர் மாவட்ட, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், மாவட்ட எல்.பி.எப்., தலைவர் அண்ணாவேலு தலைமையில், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், நேற்று மாலை பிரசார இயக்கம் நடந்தது.
அதில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், விளை பொருட்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பிரசார இயக்க கூட்டத்தில், மாவட்ட சி.ஐ.டி.யு., செயலாளர் முருகேசன், ஏ.ஐ.டி.யு.சி., செயலாளர் வடிவேலன், நிர்வாகிகள் பால்ராஜ், சுடர்வளவன், ஆனந்தராஜ், ராஜசேகரன், தனபால் உள்பட பலர் பங்கேற்றனர்.