ADDED : பிப் 15, 2025 02:02 AM
ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்
கரூர்:கரூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில், மாவட்ட அரசு ஊழியர் சங்க தலைவர் அன்பழகன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும், அரசு துறைகளில் காலியாக, 30 சதவீதத்துக்கு மேலாக உள்ள, பணியிடங்களை நிரப்ப வேண்டும், சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும், சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் ஆரோக்கிய பிரேம்குமார் உள்பட, பலர் பங்கேற்றனர்.
* குளித்தலை, பஸ் ஸ்டாண்ட் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளரும், ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான ஜெயராம் தலைமை வகித்து பேசினார்.
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் சங்க பொதுச்செயலாளர் சதீஷ், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ரகுபதி, ஆசிரியர்கள் சங்க மாவட்ட பொருளாளர் கட்டளை ரூசோ, மாவட்ட வருவாய் சங்க செயலாளர் ஜெயவேல் காந்தன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சங்க செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
* அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன், ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுமணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் தமிழ் மணியன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.