/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கம்மநல்லுாரில் குடிநீர்பிரச்னையால் மக்கள் அவதி
/
கம்மநல்லுாரில் குடிநீர்பிரச்னையால் மக்கள் அவதி
ADDED : பிப் 15, 2025 02:03 AM
கம்மநல்லுாரில் குடிநீர்பிரச்னையால் மக்கள் அவதி
கிருஷ்ணராயபுரம்:கம்மநல்லுார் பஞ்சாயத்து வார்டுகளில், குடிநீர் பிரச்னை நிலவி வருவதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் யூனியன், கம்மநல்லுார் பஞ்சாயத்துக்குட்பட்ட பொய்கைப்புத்துார் காலனி மக்களுக்காக, காவிரி குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஏற்றி வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக, குடிநீர் வினியோகம் செய்யும் பணி மந்தமான நிலையில் நடந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள், மற்ற இடங்களுக்கு சென்று குடிநீர் பிடித்து வந்து, பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே, குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில், பஞ்சாயத்து நிர்வாகம் முறையாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.