/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரேஷன் கடையை திறக்கபொதுமக்கள் வேண்டுகோள்
/
ரேஷன் கடையை திறக்கபொதுமக்கள் வேண்டுகோள்
ADDED : பிப் 21, 2025 12:42 AM
ரேஷன் கடையை திறக்கபொதுமக்கள் வேண்டுகோள்
அரவக்குறிச்சி:சின்னதாராபுரம் அருகே அரங்கபாளையம் பகுதியில் ரேஷன் கடை அமைந்துள்ளது. பழைய கட்டடம் என்பதால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது வரை புதிய கட்டடத்தை திறக்காமல் பராமரிப்பின்றி கிடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பழைய கட்டடத்தில், ரேஷன் பொருட்கள் வழங்குவதால் மழை, வெயில் காலங்களில் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடந்த 2019 முதல் 2022 வரை, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், இன்று வரை திறக்கப்படவில்லை, பராமரிப்பும் இல்லாமல், அப்பகுதி முழுவதும் குப்பை சேரும் இடமாக காட்சியளிக்கிறது. மேலும் புதிய
கட்டடத்தை திறந்து வைத்தால், பொதுமக்கள் சிரமமின்றி பொருட்கள் வாங்குவதற்கு சிறந்ததாக இருக்கும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.