/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேலம் பைபாஸ் சாலையில்நிழற்கூடத்தை புதுப்பிக்கலாமே
/
சேலம் பைபாஸ் சாலையில்நிழற்கூடத்தை புதுப்பிக்கலாமே
ADDED : பிப் 21, 2025 12:42 AM
சேலம் பைபாஸ் சாலையில்நிழற்கூடத்தை புதுப்பிக்கலாமே
கரூர்:கரூர், சேலம் பைபாஸ் சாலையில் உள்ள நிழற்கூடங்களை புதுப்பிக்க வேண்டும்.கரூர், சேலம் பைபாஸ் சாலையில் மண்மங்கலம், செங்காட்டனுார், தளவாபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில், உட்கிராமங்கள் பிரியும் இடத்தில் நிழற்கூடம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இப்பகுதி மக்கள், மாணவர்கள் நிழற்கூடத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், நிழற்கூடம் போதிய பராமரிப்பு இல்லாததால், சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.
மேலும் இருக்கைகள் பயன்படுத்திட முடியாத நிலையில் உள்ளது. பைபாஸ் சாலையில் உள்ள நிழற்கூடங்களை புதுப்பித்து, பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.