/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே மஸ்துார் யூனியன்சார்பில் ஆர்ப்பாட்டம்
/
ரயில்வே மஸ்துார் யூனியன்சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 22, 2025 01:43 AM
ரயில்வே மஸ்துார் யூனியன்சார்பில் ஆர்ப்பாட்டம்
கரூர்:கரூர் சதர்ன் ரயில்வே மஸ்துார் யூனியன் சார்பில், கிளை தலைவர் ஜெகன் தலைமையில், முதுநிலை ரயில்வே பொறியாளர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், ரயில்வே துறையை தனியார்மயமாக்கலை கைவிட வேண்டும், இரண்டு லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த அடிப்படையில், ஊழியர் எண்ணிக்கையை குறைப்பதை நிறுத்த வேண்டும், 8 வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தும் வரை, இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், பாதை பராமரிப்பாளர்கள், களப்பணியாளர்களின் பணி நேரத்தை குறைத்தல் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், 20க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் பங்கேற்றனர்.

