/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்கொத்தமல்லி விலை சரிந்தது
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்கொத்தமல்லி விலை சரிந்தது
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்கொத்தமல்லி விலை சரிந்தது
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்கொத்தமல்லி விலை சரிந்தது
ADDED : மார் 04, 2025 01:29 AM
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்கொத்தமல்லி விலை சரிந்தது
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்காம்பட்டி, புதுப்பட்டி, தாளியாம்பட்டி,
சரவணபுரம், குழந்தைப்பட்டி, வரகூர், சிவாயம், வேப்பங்குடி, பாப்பகாப்பட்டி ஆகிய இடங்களில் கொத்தமல்லி சாகுபடி நடந்து வருகிறது. கொத்தமல்லி சாகுபடிக்கு கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
தற்போது கொத்தமல்லி செடிகள் வளர்ந்துள்ளன. அதில் பசுமையான செடிகள் பறிக்கப்பட்டு, உள்ளூர் வாரச்சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தில் கொத்தமல்லி ஒரு கட்டு, 10 ரூபாய்க்கு விற்றது. தற்போது விலை குறைந்து கட்டு, 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கொத்தமல்லி விளைச்சல் காரணமாக, விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் கூறினர்.