/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி விவசாயிகள்பெங்களூருவில் கண்டுணர்வு சுற்றுலா
/
அரவக்குறிச்சி விவசாயிகள்பெங்களூருவில் கண்டுணர்வு சுற்றுலா
அரவக்குறிச்சி விவசாயிகள்பெங்களூருவில் கண்டுணர்வு சுற்றுலா
அரவக்குறிச்சி விவசாயிகள்பெங்களூருவில் கண்டுணர்வு சுற்றுலா
ADDED : மார் 04, 2025 01:32 AM
அரவக்குறிச்சி விவசாயிகள்பெங்களூருவில் கண்டுணர்வு சுற்றுலா
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை துறை சார்பில், ஆட்மா திட்டத்தின் கீழ், 20 விவசாயிகள் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் மற்றும் கால்நடை மேலாண்மை என்ற தலைப்பின் கீழ், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள மத்திய கோழி வளர்ப்பு நிறுவனம் மற்றும் பயிற்சி நிறுவனம், ஹசர்கட்டா மற்றும் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் அடுகோடி ஆகிய கால்நடை ஆராய்ச்சி நிலையங்களுக்கு சுற்றுலாவாக ஐந்து நாட்கள் அழைத்து செல்லப்
பட்டனர்.நாட்டுக்கோழி வளர்ப்பு முறை, நாட்டுக்கோழி ரகங்கள், கறிக்கோழி, ஈமு கோழி மற்றும் கோழி வகையில் உள்ள ரகங்கள் குறித்து மருத்துவர் கிருஷ்ணன் விவசாயி
களுக்கு விளக்கம் அளித்தார். கோழிகளுக்கு வழங்கும் தீவனம், வளர்ப்பு முறை, தடுப்பூசிகள் குறித்து விளக்கப்பட்டது. அவரை தொடர்ந்து
மருத்துவர் தாமோதரன், கறவை மாடுகள் வளர்க்கும் முறைகள், அவைகளுக்கு அளிக்கும் தடுப்பூசி, குடற்புழு நீக்கம் குறித்து விளக்க உரையாற்றினார்.
மேலும் பாலில் கிடைக்கும் பொருட்களை கொண்டு, மதிப்பு கூட்டுதல் எவ்வாறு செய்தல் என்பது குறித்தும், கால்நடைகளுக்கு அளிக்கும் ஹைட்ரோபோனிக்ஸ் பசுந்
தீவனம் குறித்தும், விவசாயிகளுக்கு தொழில் நுட்ப விளக்க உரை அளிக்கப்பட்டது. கால்நடை ஆராய்ச்சி நிலையம், அடுகோடி மருத்துவர் சுபாஷ், மருத்துவர் ஜெயக்குமார் பால் உற்பத்தியை பெருக்குதல், மாடுகளை பராமரித்தல், மாடுகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் சினை ஊசி அளிக்கும் முறைகள் குறித்து விளக்கமளித்தனர்.
இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் சார்பில், அமைக்கப்பட்ட கண்காட்சியை விவசாயிகள் பார்வையிட்டு, மரக்கன்றுகள் வாங்கி பயனடைந்தனர்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் சோனியா, உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரபாகரன் ஆகியோர் விவசாயிகளை ஒருங்கிணைத்து அழைத்து சென்றனர்.