/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கி.புரத்தில் வெள்ளரி விற்பனை தீவிரம்
/
கி.புரத்தில் வெள்ளரி விற்பனை தீவிரம்
ADDED : மார் 07, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கி.புரத்தில் வெள்ளரி விற்பனை தீவிரம்
கிருஷ்ணராயபுரம்,:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, கீரனுார், கொசூர், குளத்துார், பாப்பகாப்பட்டி, சேங்கல், சின்ன சேங்கல், வேங்காம்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வெள்ளரி சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது வெயில் அதிகம் அடிப்பதால், வெள்ளரி விளைச்சல் அதிகரித்து வருகிறது.
வெள்ளரிகளை பிஞ்சுகளாக பறித்து, மக்கள் கூடும் பஸ் ஸ்டாப் பகுதிகளில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. தற்போது வெள்ளரிப்பிஞ்சு ஒன்று, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.