/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுமிக்கு பாலியல்தொல்லை: வாலிபர் கைது
/
சிறுமிக்கு பாலியல்தொல்லை: வாலிபர் கைது
ADDED : மார் 08, 2025 01:31 AM
சிறுமிக்கு பாலியல்தொல்லை: வாலிபர் கைது
கரூர்:கரூரில், சிறுமியிடம் ஆபாச வீடியோவை காட்டி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை, போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி பகுதியை சேர்ந்த மருதமுத்து என்பவரது மகன் விக்னேஷ், 19; கோவையில் தனியார் மருத்துவமனையில், லேப் டெக்னீஷியனாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த, 2023 முதல் அதே பகுதியை சேர்ந்த, ஆறு வயது சிறுமியிடம், ஆபாச வீடியோவை காட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தாய் கொடுத்த புகார்படி, கரூர் மகளிர் போலீசார் விக்னேைஷ போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பிறகு, கரூர் ஜே.எம்.,1- நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி வரும், 19 வரை விக்னேைஷ, திருச்சி
மத்திய சிறையில் அடைத்தனர்.கருவேல மரங்களை அகற்றலாமேஅரவக்குறிச்சி:அரவக்குறிச்சியில் உள்ள காலி நிலம், நங்காஞ்சி ஆறு உள்ளிட்ட வறண்ட நீர் நிலைகளில், சீமை கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. குறிப்பாக, நங்காஞ்சி ஆறு மற்றும் அதன் கரையோர பகுதியிலும் அரசு தலைமை மருத்துவமனைக்கு பின்புறம் கிழக்கு பகுதியிலும் நங்காஞ்சி ஆறு முழுவதும் சீமை கருவேல மரங்கள் முள் காடு போல் வளர்ந்துள்ளன.
அதன் வேர்கள், நிலத்தடி நீரை உறிஞ்சுவதால், எதிர் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.