/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆளவந்தீஸ்வரர் கோவிலில்ஐம்பெரும் விழா கொடியேற்றம்
/
ஆளவந்தீஸ்வரர் கோவிலில்ஐம்பெரும் விழா கொடியேற்றம்
ADDED : மார் 08, 2025 01:32 AM
ஆளவந்தீஸ்வரர் கோவிலில்ஐம்பெரும் விழா கொடியேற்றம்
குளித்தலை:குளித்தலை அடுத்த பழைய ஜெயங்கொண்டம், சோழபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவாலயமான, ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஐம்பெரும் விழா நடைபெற உள்ளதையொட்டி, நேற்று முன்தினம் காலை, சிவாச்சாரியார் பாஸ்கரன் தலைமையில் சிவனடியார்கள் முன்னிலையில், முகூர்த்தகால் நடப்பட்டு, ரிஷப வாகன கொடி ஏற்றப்பட்டது.
நாளை, 108 வலம்புரி சங்கு அபிஷேகம், வருடாபிஷேகமும் நடைபெற உள்ளது. 11ல் பிரதோஷ வழிபாடு, 12ல் ஆலயத்திலிருந்து திரைக்குலத்திற்கு தீர்த்தம் எடுத்துச் செல்லுதல் பின், நடராஜர் அபிஷேகமும், மாலை பஞ்சமூர்த்தி புறப்படுதல் மற்றும் திருக்குளத்தில்
தீர்த்தவாரி நடக்க உள்ளது.