ADDED : மார் 09, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கஞ்சா வைத்திருந்தவாலிபர் கைது
கரூர்:கரூர் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீஸ் எஸ்.ஐ., சையத் அலி, நேற்று முன்தினம் பசுபதிபாளையம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கஞ்சா வைத்திருந்ததாக அதே பகுதியை சேர்ந்த ராஜரத்தினம், 20; என்பவரை மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் ராஜரத்தினத்திடம் இருந்து, 80 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.