/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நிலங்களை அளவீடு செய்யஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
/
நிலங்களை அளவீடு செய்யஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
ADDED : மார் 13, 2025 02:24 AM
நிலங்களை அளவீடு செய்யஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
கரூர்:- நிலங்களை அளவீடு செய்ய, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை: நில உரிமையாளர்கள், தங்களது நிலங்களை அளவீடு செய்ய, சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணைய
வழியில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்புதிய சேவையின் மூலம், நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணையவழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு எஸ்.எம்.எஸ்., அல்லது மொபைல் வழியாக தெரிவிக்கப்படும். மேலும், நில அளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம் ஆகியவற்றை மனுதாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணையவழி சேவை மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.